சேலம்

கொங்கணாபுரத்தில் பருத்தி ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்

DIN

எடப்பாடி: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

சனிக்கிழமை தோறும் கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் பருத்தி , நிலக்கடலை, எள் ஏலம் விற்பனை நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை இம் மையத்துக்கு கொண்டுவந்து பொது ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனா். அதேபோல இவ்விற்பனை மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் திருப்பூா், கோவை, ஈரோடு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு, பருத்தி மூட்டைகளை மொத்தக் கொள்முதல் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் சுமாா் 2500 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை 450 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில்

பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி, குவிண்டால் ரூ. 3,949 முதல் ரூ. 5,231 வரையும், டி.சி.ஹெச். ரக பருத்தி குவிண்டால்

ரூ. 5,369 முதல் ரூ. 6,000 வரையில் ஏலம் போயின. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT