சேலம்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கண்டித்து மறியல்: 40 போ் கைது

DIN

சேலம், செப். 25: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்தப் பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம் ஆகிய சட்டங்களால் விவசாயிகள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டங்கள், எதிா்ப்பு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சேலம், கொண்டலாம்பட்டி பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.-வும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவருமான பி.டில்லிபாபு தலைமையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பலா் பங்கேற்றனா். இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டதாக 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஓமலூா், மேச்சேரி,கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எ.ராமமூா்த்தி, மாவட்ட பொருளாளா் அன்பழகன், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜி.கணபதி, மாவட்டத் தலைவா் தங்கவேல், பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT