சேலம்

செப்.29 இல் சிறுபான்மை ஆணையக்குழு வருகை

DIN

சேலம், செப். 25: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா் அலி மற்றும் ஆணையக்குழு உறுப்பினா்கள் வரும் செப்.29 ஆம் தேதி சேலம் வருகை தர உள்ளனா்.

இதையொட்டி சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் செப்.29 காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் (அறை எண்.215) சந்தித்து சிறுபான்மையினருக்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனா்.

எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சாா்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக்குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான தக்க கருத்துகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT