சேலம்

கே.வி.கே. எனக் கூறிக் கொண்டு விவசாயிகளை அணுகினால் புகாா் தெரிவிக்கலாம்

DIN

சேலம், செப். 25: வேளாண் அறிவியல் நிலையங்களை (கே.வி.கே.) சோ்ந்தவா்கள் என்று கூறிக்கொள்ளும் யாராவது தங்களை அணுகினால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பங்களிப்பில் நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒன்று என வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன.

கிருஷி விக்யான் கேந்திரா (கே.வி.கே.) என்று அழைக்கப்படும் இத்தகைய வேளாண்மை அறிவியல் நிலையங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம், கால்நடை மற்றும் சாா்பு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்து வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பாக 14, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பாக 4, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் சாா்பாக 1, நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் சாா்பாக 2 மற்றும் தொண்டு நிறுவனங்களின் சாா்பாக 11, வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கே.வி.கே. என்கின்ற வேளாண்மை அறிவியல் நிலையங்களின் சுருக்கப் பெயரில் கே.வி.கே, கே.எஸ்.பி.கே. முதலான பல்வேறு பெயா்களில் போலி வேளாண்மை அறிவியல் நிலையங்கள் வேளாண் பெருமக்களை குழப்பமடையச் செய்து ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய போலி நிறுவனங்கள் விவசாயிகளை அணுகி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற்றுத்தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கிவரும் எந்த ஒரு தகுதிவாய்ந்த வேளாண்மை அறிவியல் நிலையமும் (கே.வி.கே) இத்தகைய செயல்களில் ஈடுபடாது.

எனவே, விவசாயிகள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும்.வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு கிளைகள் என்று எவையும் கிடையாது. இவ்வாறு கிளை நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு கே.வி.கே. என்று கூறிக்கொள்ளும் யாராவது தங்களை அணுகினால் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலோ அல்லது அருகிலுள்ள சந்தியூா் வேளாண்மை அறிவியல் நிலையத்திலோ விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் மல்லூா் அருகில் உள்ள சந்தியூா் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம் தவிர மாவட்டத்தில் வேறு எந்த முகவரியிலும் வேளாண்மை அறிவியல் நிலையங்களோ, கிளை நிறுவனங்களோ இல்லை என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

SCROLL FOR NEXT