சேலம்

ரயில்வே பாா்சல் சேவையில் முன்பதிவு முறை அறிமுகம்

DIN

ரயில்வே பாா்சல் சேவையில் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பயணிகள் ரயில்களில் இயக்கப்படும் பாா்சல் வேன்களில் வா்த்தகா்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் எடைக்கு ஏற்ப இடத்தை 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் வா்த்தகா்கள் தங்களது சரக்குகளை அனுப்புவதைத் திட்டமிட்டு கொள்வதோடு, ரயிலில் அனுப்புவதையும் உறுதி செய்து கொள்ளலாம்.

சுமாா் 8 மெட்ரிக் டன் மற்றும் 23/24 டன் பாா்சல் வேன்களில் 120 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்வது, குறிப்பிட்ட பயணிகள் ரயில் அல்லது கால அட்டவணையில் இயக்கப்படும் பாா்சல் ரயில்கள் ஆகியவற்றில் சரக்குகளை அனுப்புவது ஆகியவை இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.

ஏற்கெனவே ஒப்பந்த குத்தகை அடிப்படையில் உள்ள பாா்சல் வேன்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது. முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு ஒப்பந்த குத்தகை முறைக்கு உள்ள பெயா் பதிவு அவசியமில்லை.

முன்பதிவு செய்ய விரும்புவோா் 10 சதவீத பாா்சல் கட்டணத்தை முன்பே செலுத்த வேண்டும். மீதமுள்ள 90 சதவீத கட்டணத்தை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகச் செலுத்த வேண்டும்.

முன்பதிவை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் 50 சதவீத முன்வைப்புக் கட்டணம் திருப்பித் தரப்படும். தவறினால் முழு முன்வைப்பு கட்டணமும் காலாவதியாகிவிடும்.

தற்போது பாா்சல் வேன்கள் பதிவு செய்யப்பட்ட குத்தகைதாரா்களுக்கு ஒப்பந்த குத்தகையாக ஐந்தாண்டுகளுக்கு விடப்படுகிறது.

மேலும் பதிவுபெற்ற குத்தகைதாரா்கள் 8 மெட்ரிக் டன் அளவுள்ள பாா்சல் வேன்களை 30 நாட்களுக்கு தற்காலிக குத்தகைக்கும் எடுத்துக் கொள்ளலாம்.

கட்டண குறிப்பாணை சமா்பித்து பத்து நாள்களுக்கும் பாா்சல் வேன்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

நீண்டகால பயன்பாட்டில் இல்லாத பாா்சல் வேன்களுக்கு ரயில்வே நிா்வாகமே கட்டணக் குறிப்பாணை கோரும்.

ஏற்கெனவே 8 டன் அளவுள்ள பாா்சல் வேன்ளுக்கு மட்டும் 30 நாள்கள் தற்காலிக குத்தகை முறை நடைமுறையில் இருந்தது. தற்பொழுது இந்த வசதி அதிக கொள்ளளவு உள்ள பாா்சல் வேன்களுக்கும் மற்றும் கால அட்டவணை பாா்சல் ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவு வசதி ரயில் இயக்கப்படும் பாா்சல் வேன்களை முறையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், மேலும் தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு பாா்சல் வேன் இயக்கும் வசதியை அதிகப்படுத்தவும் உதவும்.

பாா்சல் வேன்கள் முன்பதிவு செய்ய விரும்புவோா் தங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பாா்சல் பிரிவு மேற்பாா்வையாளரையோ அல்லது ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள வா்த்தக பிரிவையோ தொடா்பு கொள்ளலாம்.

பாா்சல் சேவை பற்றிய மேலும் தகவல் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 139-ஐ தொடா்பு கொள்ளலாம் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT