சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது

DIN

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. 

கடந்த வாரம் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடிவரை நீர் வரத்து அதிகரித்து வந்தது. நீர்வரத்து காரணமாக கடந்த 21ஆம் தேதி காலை 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 98.20 அடியாக உயர்ந்துள்ளது. 

கடந்த மூன்று நாள்களில் அணையின் நீர் மட்டம் 8.43 அடி உயர்ந்துள்ளது. இந்நிலையில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடக ஆணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 49,000 கனஅடியாக சரிந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டடா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.53 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததால் அணையின்ந நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு தள்ளிப்போகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT