சேலம்

காவலா் தூக்கிட்டு தற்கொலை

DIN

தலைவாசல் அரசுப் பள்ளியில் தங்கியிருந்த காவலா், திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் அருண் மகன் வெங்கடேஷ் (28). கடந்த 2006-ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சோ்ந்தாா். பட்டாளியன் காவலராகப் பணிபுரிந்து வந்த அவா், தலைவாசலில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அவரோடு 7 காவலா்கள் அதே பகுதியில் அரசுப் பள்ளியில் தங்கியிருந்தனா். திங்கள்கிழமை இரவு வெங்கடேஷ் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். விசாரணையில் வெங்கடேஷ், சமீப காலமாக ஆன்லைனில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்துள்ளாா்.

இதனால் சிலரிடம் வாங்கியக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவா்கள் உயா் அதிகாரிகளிடம் புகாா் செய்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

SCROLL FOR NEXT