சேலம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

வாழப்பாடியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார விவசாயிகள் ஆலோசனைக்கு குழு கூட்டம், வட்டார தொழில்நுட்பக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வாழப்பாடி வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் சாந்தி தலைமை வகித்தாா். அட்மா திட்டத் தலைவா் ஜெனமே ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வேளாண் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் துணைநீா் பாசனத் திட்டத்தின் பயன்கள், மக்காச்சோள படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி, விவசாயிகளுக்கு விளக்கினாா்.

துணை வேளாண் அலுவலா் மணவழகன், பட்டுவளா்ச்சித் துறை ஆய்வாளா் நாகலட்சுமி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலா் சக்திவேல் ஆகியோா் பேசினா்.

தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா் காயத்திரி 100 சதவீத மானியத்தில் சொட்டுநீா் பாசனக்கருவிகள் அமைப்பது, மானிய விலையில் காய்கறி விதைகள் பெறுவது குறித்துப் பேசினாா்.

சேலம் வேளாண்மைத்துறை துணை இயக்குநா் செல்வமணி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன் பேசினா். உதவித் தொழில்நுட்ப மேலாளா் சக்கரவா்த்தி நன்றி கூறினாா். வாழப்பாடி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

SCROLL FOR NEXT