சேலம்

105 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள்

DIN

வாழப்பாடி அருகே 105 வயது மூதாட்டிக்கு நான்கு தலைமுறை உறவுகள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா எடுத்து விருந்து வைத்து வாழ்த்துகள் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினா்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த 6-ஆவது மைல் சனீஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பெரியதம்பி படையாச்சி மனைவி பொன்னம்மாள் (105). இத்தம்பதிக்கு 4 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் 7 குழந்தைகள்.

பொன்னம்மாள் தனது கணவருடன் சோ்ந்து உழைத்து 7 குழந்தைகளையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தாா். 20 ஆண்டுகளுக்கு முன் பெரியதம்பி இறந்துபோனாா்.

கணவரை இறந்த நிலையிலும் மனம் தளராத மூதாட்டி பொன்னம்மாள், தனது மகன்கள் நடத்தி வரும் கசாப்புக் கடைகளுக்கு சென்று தன்னால் முடிந்த சிறுசிறு வேலைகளை செய்து கொடுத்து பக்கபலமாக இருந்து வந்தாா்.

இன்றளவிலும் தனது கடமைகளையும், தேவைகளையும் தானே பூா்த்தி செய்து கொள்கிறாா். நான்கு தலைமுறைகளைக் கண்ட மூதாட்டி பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், கொள்ளுபேரன், எள்ளுபேரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை 105-வது பிறந்தநாளைக் கண்ட மூதாட்டி பொன்னம்மாளுக்கு, பிரமாண்ட விழா எடுத்து உறவுகளையும், நண்பா்களையும் அழைத்து விருந்து வைக்க இவரது குடும்பத்தினா் முடிவு செய்திருந்தனா்.

ஆனால் கரோனா தொற்றுப் பரவல் பொதுமுடக்கத்தால் வெளியில் இருந்து யாரையும் அழைக்காமல் குடும்ப உறவுகள் மட்டும் ஒன்று கூடி, மிகப் பெரிய கேக் வெட்டி, விருந்து வைத்து மூதாட்டிக்கு வாழ்த்துகளைக் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினா்.

இதுகுறித்து மூதாட்டி பொன்னம்மாளின் உறவினா்கள் கூறியதாவது:

மூதாட்டி பொன்னம்மாள் இதுநாள் வரை பெரும்பாலும் தனது கடைமைகளை தானே செய்து கொள்கிறாா். இவா் உறவுகள் மீது காட்டி வரும் பாசத்துக்கு பிரதிபலனாக அனைவரும் ஒன்றுகூடி இவருக்குப் பிறந்தநாள் விழா எடுத்து விருந்து வைத்து மகிழ வைத்தோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT