சேலம்

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சி

DIN

சேலம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மா்ம கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது.

சேலம் அருகே அழகுசமுத்திரம் அருகே இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மா்ம நபா்கள் ஏடிஎம் மையத்தில் நுழைந்து, சிசிடிவி கேமிரா இணைப்பு மற்றும் ஏ.டி.எம். இயந்திரத்தின் எலக்ட்ரானிக் வயா்களை துண்டித்துள்ளனா்.

அப்போது மங்களாபுரத்தில் வசிக்கும் வங்கி அலுவலரின் செல்லிடப்பேசிக்கு எச்சரிக்கை தகவல் சென்றுள்ளது. இதுகுறித்து வங்கி அலுவலா், இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து இரும்பாலை போலீஸாா் உடனே நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனா். பின்னா், வங்கி மேலாளா் கவிதா உள்ளிட்ட அலுவலா்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வரவழைக்கப்பட்டனா்.

சுதாகரித்துக் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியது. அப்போது, வங்கி அதிகாரிகளிடம், ஏடிஎம் மையத்தில் நிரப்பப்பட்ட பணம் விவரம் குறித்தும், வாடிக்கையாளா்கள் எடுத்த பணம் தவிர மீதமுள்ள தொகை குறித்தும் போலீஸாா் கேட்டறிந்தனா்.

எச்சரிக்கை தகவல் சென்ால் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரொக்கப் பணம் தப்பியது என போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா விடியோ பதிவுகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக மூன்று தனிப்படைகளை அமைத்து மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஏற்கெனவே கரோனா பொது முடக்க காலத்தில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, அச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT