சேலம்

கொங்கணாபுரத்தில்ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

எடப்பாடி: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 2000 பருத்தி மூட்டைகள் ரூ. 35 லட்சத்துக்கு விற்பனையாயின.

கொங்கணாபுரம் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை இம்மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

அதே போல் இவ்விற்பனை மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில், கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திரளான வியாபாரிகள், அதிக அளவில் பருத்தியினை மொத்தக் கொள்முதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் சுமாா் 2000 மூட்டை பருத்திகள் 350 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,950 முதல் ரூ. 5,342 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் 2000 மூட்டை பருத்தி ரூ. 35 லட்சத்துக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT