சேலம்

மழைநீரை சேமிக்க சங்ககிரி லஷ்சுமண தீர்த்த குளத்தில் களர் செடிகள் அகற்றம் 

20th Sep 2020 06:33 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் இணைந்து தற்போது சங்ககிரி நகரில் மழை பெய்து வருவதையடுத்து சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலை பகுதியில் உள்ள லஷ்சுமண தீர்த்த குளத்தில் மழைநீரை சேகரிக்க தேவையற்ற களர் செடிகளை அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலை பகுதியில் பழமை வாய்ந்த லஷ்சுமண தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தின் மேல் பகுதியில் ஆஞ்சநேயர் சுவாமி கோயில், நந்தி சுவாமி  மண்டம் உள்ளது. குளத்தில் கடந்த பல ஆண்டுகளாக தேவையற்ற களர்செடிகள் வளர்ந்து, மழை நீர் முழுவதும் குளத்தின் உள்பகுதிக்கு செல்லாமல் தடுத்து வந்தன. 

தற்போது பெய்து வரும் மழை நீர் குளத்தின் உள்பகுதிக்கு சென்று சேமிக்க முடிவு செய்து பேரூராட்சி நிர்வாகம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், சங்ககிரி அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம், இன்னர்வீல் கிளப், உதவும் கரங்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை குளத்தின் உள், வெளிப் பகுதி என நான்கு பக்கங்களில் தேவையில்லாமல் வளர்ந்து வந்த களர் செடிகள்,  நெகிழிபைகள், ஈமச்சடங்கு செய்துவிட்டு தூக்கி எறிந்து விட்டு சென்ற பொருள்கள், பழைய துணிகள் உள்ளிட்டவைகளை முழுவதும் அகற்றினர்.  

பேரூராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் சுரேஷ், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார், செயலர் ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகிகள் கார்த்திகேயன், பொறியாளர் வேல்முருகன், வெங்கடேஷ், ஐவேலி வெங்கடேஷ், நாகராஜ்  அரிமா மண்டலத்தலைவர் சண்முகம், கோட்டை அரிமா சங்க செயலர் ரமேஷ், பொருளாளர் சக்திவேல், உதவும்கரங்கள் நிர்வாகி சத்யபிரகாஷ், கிழக்குபகுதி அன்னதான குழு தலைவர் மாணிக்கம், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

அரிமா சங்கம்,  கோட்டை அரிமா சங்கங்களின் சார்பில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினர். ஐவேலி வெங்கடேஷ் அனைவருக்கும் தேநீர் வழங்கினார். கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் குளங்களில் உள்ள தேவையற்ற களர் செடிகளை அகற்றுவதற்கான நவீன முள் வெட்டும் கருவி ஒன்றை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்டிற்கு வழங்கினர்.  குளத்தினை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுநல அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
 

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT