சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 12,079 கன அடியாகச் சரிவு

DIN

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,079 கன அடியாகச் சரிந்துள்ளது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழையின் அளவு குறைந்து வருகிறது. இதனால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 13,001 கன அடியாக இருந்த நிலையில், சனிக்கிழமை காலை நொடிக்கு 12,079 கன அடியாகச் சரிந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 90.84 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 12,079 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 53.61 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT