சேலம்

சங்ககிரியில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் 

17th Sep 2020 12:46 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் சங்ககிரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலகம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.தங்கமுத்து, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, நகரச் செயலர் எல்ஐசி சுப்ரமணியம்,  நிர்வாகிகள் சின்னதம்பி, அத்தியண்ணன், சரவணன், ரத்தினம், தளபதி சண்முகம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT