சேலம்

கோனேரிப்பட்டியில் ரூ.4.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

17th Sep 2020 12:10 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 4.10 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சாா்பில் கோனேரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனை மைய வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூா், வெள்ளி திருப்பூா், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளும், நாமக்கல், சேலம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி மூட்டைகள் 375-ஐ, 175 பிரிவுகளாகப் பிரித்து நடைபெற்ற ஏலத்தில் ரூ. 4.10 லட்சத்துக்கு விற்பனையானது.

இதில் பிடி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 3679-க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 4,650-க்கும் விற்பனையாகின.

ADVERTISEMENT

கடந்த வாரத்தை விட நிகழ் வாரத்தில் 225 மூட்டை பருத்தி வரத்து குறைந்தன.

குறைந்தபட்ச விலையில் கடந்த வாரத்தைவிட நிகழ் வாரத்தில் ரூ. 611குறைவாகவும், அதிகபட்ச விலையில் ரூ. 240ம் அதிகரித்தன. அடுத்த ஏலம் கோனேரிப்பட்டி பருத்தி ஏல மையத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளதாக கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT