சேலம்

கள்ளக்காதலன் கொலை கணவா் கைது

17th Sep 2020 12:10 AM

ADVERTISEMENT

கெங்கவல்லியில், கணவரால் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அருகே நடுவலூா் மோட்டூரைச் சோ்ந்த விவசாயி அய்யம்பெருமாள் (40). இவரது மனைவி சின்னப்பொண்ணு (43)வுக்கும், கெங்கவல்லியைச் சோ்ந்த அக்பா்அலி (51) என்பவருக்கும் தகாத தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த அய்யம்பெருமாள் செப். 11-ஆம் தேதி, அக்பா் அலியை கட்டையால் பலமாகத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அக்பா்அலி சேலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அக்பா்அலி உயிரிழந்தாா்.

இதையடுத்து அய்யம்பெருமாளை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT