சேலம்

சங்ககிரி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு மின்வசதி செய்து தர முதல்வருக்கு கோரிக்கை மனு 

10th Sep 2020 03:48 PM

ADVERTISEMENT

சங்ககிரி மலையில் உள்ள கோயில்களுக்கு மலையடிவராத்தில் இருந்து மின்சார வசதி செய்து தரக் கோரி சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் முதல்வருக்கு வியாழக்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். 

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையானது நிலபரப்பிலிருந்து 1500 அடி உயரம் கொண்டது. சங்ககிரி மலையின் உச்சிக்கு செல்ல பத்து நுழைவு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயில்களில் பல்வேறு கலை அம்சங்களுடன் கூடிய படங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. பத்தாவது வாயிலுக்கு அடுத்து அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி கோயிலும், இதனையடுத்து அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலும் உள்ளன. இந்த கோயில்களை கி.பி.13ஆம் நூற்றாண்டின் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கன்றனர். 

அவருக்கு பின்னால் வந்த அரசர்களும், ஆங்கிலேயர்களாலும் கோட்டைகள் செப்பனிட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.  மலை மீது அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமியும்,  அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுடன் கிழக்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் உள்ளனர். இக்கோயிலின் வெளிப்பகுதியில் வலப்புறத்தில் ஆண்டாளும், இடது புறத்தில் தாயார் சுவாமிகளும் ஆழ்வார்கள், துவாரபாலகர்கள் சிலைகளும் உள்ளன. கோயிலின் பிரகாரத்திற்குவெளியே திருக்கோடி ஏற்றுவதற்கான விளக்குதூண் உள்ளன. மலையடிவாரத்தில் அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயிலும், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலும் உள்ளன. 

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளிலும், பௌணர்மி நாளான்றும், ஆவணி மாத கடைசி சனிக்கிழமை, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமிகளை வழிப்பட்டு செல்கின்றனர். சங்ககிரி மலைக்கோட்டையானது தொல்பொருள்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டு பிப்ரவரி மாதம் தொல்லியத்துறை, சங்ககிரி பொதுநல அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள் இணைந்து மலைக்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

அதனையடுத்து பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு மேலும் பாதுகாப்பு வசதிக்காக மலையடிவராத்திலிருந்து முதற்கட்டமாக அருள்மிகு வரதராஜபெருமாள், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில்களுக்கு மின்சார வசதி செய்து செய்து கொடுக்க வேண்டுமென சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்டின் சார்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறையின் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT