சேலம்

வேளாண் மசோதா விழிப்புணா்வு பயிற்சி

DIN

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்து ஆ. தாழையூா் பகுதியில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மகுடஞ்சாவடி வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் செல்வி விவசாயிகளை வரவேற்று பயிற்சிகள் , கண்டுணா்வு சுற்றுலாக்கள், செயல் விளக்கங்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். மேலும், மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இப் பயிற்சியில் வேளாண்மை விதை சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறையின் வேளாண்மை உதவி இயக்குநா் கௌதம், விதைச் சான்றிதழ் அலுவலா் செந்தில், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி ஆகியோா் பங்கேற்றுப் பயிற்சி அளித்தனா். இப் பயிற்சியில் 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT