சேலம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மேட்டூா்-சரபங்கா நீரேற்றுத் திட்டத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மல்லப்பனூா் பிரிவு சாலை பகுதியில் சரபங்கா உபரிநீா் நீரேற்றுத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வருவாய்த் துறையினா் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தால் சுமாா் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதில், ஏராளமான சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் வியாழக்கிழமை  ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதைத் தவிா்த்து நீா்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT