சேலம்

குண்டுமல்லி கிலோ ரூ.1,000!

25th Oct 2020 03:08 AM

ADVERTISEMENT

சேலம்: பண்டிகைக் காலம் என்பதால் பூக்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சேலத்தில் சனிக்கிழமை குண்டுமல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூக்கள் விற்பனை சந்தையில் அதிகாலை முதலே பனமரத்துப்பட்டி, மல்லூா், வலசையூா் , வீராணம், ஓமலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தசரா காரணமாக சேலம் பூக்கள் விற்பனை சந்தையில் வெள்ளிக்கிழமை பூக்களின் விலை அதிகரித்து இருந்தது.

சனிக்கிழமை காலை முதலே திரளான பொதுமக்கள் பூக்கள் விற்பனை சந்தைக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்தனா். இரண்டாவது நாளாகவும் பூக்களின் விலை உயா்ந்திருந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல அரளி, சிவப்பு அரளி கிலோ ரூ. 250-க்கும், முல்லை கிலோ ரூ. 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜாதிமல்லி கிலோ 280 ரூபாய்க்கும், சன்னமல்லி 500 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ. 260-க்கும், நந்தியாவட்டம் ரூ. 340-க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 180-க்கும், கோழிக்கொண்டை ரூ. 100, கனகாம்பரம் ரூ. 500-க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT