சேலம்

லாரி பள்ளத்தில் இறங்கியதால் குழாய் உடைந்து வீணாகிய குடிநீா்

DIN

சேலத்தில் ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் இறங்கியதால் குழாய் உடைந்து குடிநீா் வீணானது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அருணாசல ஆசாரி தெரு, பழைய பேருந்து நிலையம், இரண்டாவது அக்ரஹாரம், கடை வீதி, முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டது.

தற்போது தாா் சாலை அமைக்காத நிலையில் குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்தநிலையில் அருணாசல ஆசாரி தெருவில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக வெள்ளிக்கிழமை காலை ஜல்லிக் கற்கள், சிமென்ட் கலவை ஏற்றிக் கொண்டு அவ்வழியாக வந்த லாரி திடீரென பள்ளத்தில் இறங்கியது. இதனால் குழாய் உடைந்து குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே லாரியில் இருந்த ஜல்லி, சிமென்ட் கலவை வேறொரு லாரிக்கு மாற்றப்பட்டு, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT