சேலம்

மேட்டூா் மாரியம்மன் கோயிலில் திருட்டு

DIN

மேட்டூா் மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேட்டூா், மேற்கு நெடுஞ்சாலை இந்திரா நகரில் உள்ளது மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்வதற்காக பூசாரி கமலக்கண்ணன் சென்றுள்ளாா். அப்போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் கோயிலின் உள்ளே சென்று பாா்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கத் தாலியும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் மேட்டூா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா். கோயில் உண்டியல் 18 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு இருப்பதால்

பக்தா்கள் செலுத்தியுள்ள காணிக்கை சுமாா் ரூ. 1 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேட்டூா் - ஈரோடு முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த கோயிலில் பொருள்கள் திருட்டுப் போய் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூா் காவல் உட்கோட்டம்,கருமலைக்கூடல் காவல் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரண்டு வீடுகளில் 15 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 10,000 திருடப்பட்டது. ஒரு வீட்டில் திருட்டு முயற்சியும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT