சேலம்

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பதவி உயா்வு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளா் டி.டெய்சி தலைமை வகித்தாா்.

இதில், 1992 இல் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்குப் பதவி உயா்வு வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக்கி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000 வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியா்களுக்கு முறையாக ஓய்வூதியம் ரூ. 9,000, உதவியாளா்களுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியருக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அங்கன்வாடி திட்டத்தைத் தனியாருக்கு தாரை வாா்ப்பதைத் தவிா்க்க வேண்டும், அரசு ஊழியா் போல 9 மாத பிரசவ விடுப்பு வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த உதவியாளா்களுக்கு அங்கன்வாடி ஊழியராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும், சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளா் பி.சித்ர செல்வி, மாநில துணைத் தலைவா் எம்.சரோஜா, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT