சேலம்

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் மரணம்

24th Oct 2020 05:39 PM

ADVERTISEMENT

சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்

சேவம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நாட்டுக்கோட்டை மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை 18.10.2020 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலை காரில் சென்றுள்ளார். அவருடைய காருக்கு முன்னால் 10 நிமிடத்திற்கு முன்பு டிஐஜி விரைவுப் படை வாகனம் சென்று கொண்டிருந்தது. 

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது வேன் மோதியதில் காரின் பின்னால் அமர்ந்திருந்த இரு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை சௌந்தரம் அம்மாள்(63)என்பவர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி மனைவி ஆவார். ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் கே.முருகேசன் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

ADVERTISEMENT

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT