சேலம்

மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணை

24th Oct 2020 05:33 PM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இன்று மாலை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த மாதம் 25-ல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 

தொடர்ந்து நீர்வரத்து மேட்டூர் அணைக்கு அதிகரித்து வந்ததால் இம்மாதம் 13-ஆம் தேதி இரண்டாவது முறையாகவும், இன்று 3-ஆவது முறையாகவும் 100 அடியை எட்டியது.

ADVERTISEMENT

 மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 100 அடியை எட்டுவது நடப்பாண்டில் இது மூன்றாவது முறையாகும். 

இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,694 அடியாகவும், நீர் இருப்பு 64.71 டி.எம்.சி,யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

Tags : mettur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT