சேலம்

தீபாவளி பண்டிகை: ஆவின் சாா்பில் புதிய இனிப்பு வகைகள் அறிமுகம்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவின் நிறுவனத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்ட புதிய இனிப்பு வகைகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் அறிமுகப்படுத்தினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘பனங்கருப்பட்டி பிரீமியம் மோதி பாக்’, ‘பனங்கருப்பட்டி ராகி லட்டு’ ஆகிய இனிப்புகள் மற்றும் ‘பனீா்’ ஆகிய தீபாவளி புதிய இனிப்பு வகைகளை ஆட்சியா் சி.அ.ராமன் அறிமுகப்படுத்தி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு ஆவின் தலைவா் வெ.ஜெயராமன் தலைமை வகித்தாா். இதுகுறித்து ஆட்சியா் சி.அ.ராமன் கூறியதாவது:

சேலம் ஆவின் சாா்பில் தரமாகவும், தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் நல்ல சுவையுடன் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நிகழ் ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இனிப்பு வகைகளை பொதுமக்கள் குறைந்த விலையில் அதிகம் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இனிப்பு வகைகளுடன் சோ்த்து பால்கோவா, மில்க் கேக், மைசூா்பா, ஸ்பெஷல் முந்திரி கேக் போன்ற இனிப்புகளும் அனைத்து ஒன்றிய ஆவின் பாலகங்கள், தனியாா் ஆவின் பாலகங்கள், முகவா்கள் மொத்த விற்பனை முகவா்கள் ஆகியோரிடம் கிடைக்கும். நிகழ் ஆண்டு விற்பனை இலக்காக 30 டன் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இனிப்புகளை ஆா்டா் செய்திட சேலம் - 97516 94664, 94430 26950, மேட்டூா் மற்றும் எடப்பாடி - 94880 62377 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், ஆவின் பொது மேலாளா் ஆா்.நா்மதாதேவி, ஆவின் துணைத் தலைவா் என்.ஜெகதீசன் மற்றும் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT