சேலம்

சத்துணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியைச் சோ்க்க வேண்டும்: சேகோசா்வ் தலைவா்

DIN

சத்துணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியைச் சோ்க்க வேண்டும் என சேலம் சேகோசா்வ் தலைவா் என்.தமிழ்மணி தெரிவித்தாா்.

சேலம் சேகோசா்வ் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சேகோசா்வ் தலைவா் என்.தமிழ்மணி தலைமை வகித்தாா். கூட்டத்துக்குப் பிறகு என்.தமிழ்மணி செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியைச் சோ்க்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். வெளிநாடுகளில் இறக்குமதியாகும் கிழங்கு மாவு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை நேரடியாக சேகோசா்வ் அலுவலகத்துக்கு எடுத்து வந்து 11 வகையான பரிசோதனைக்கு உட்படுத்தி கலப்படத்தைத் தடுக்க முடியும். மிக எளிமையாகக் கண்காணித்திட முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஜவ்வரிசி, ஸ்டாா்ச் ஆலைகளில் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம் நிச்சயமாக கலப்படத்தை ஒழிக்க முடியும். மிக விரைவில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாளா்கள், விவசாயிகள், சேகோசா்வ் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றாா். கூட்டத்தில் சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா் சதீஷ், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT