சேலம்

101 அடியை நெருங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்

30th Nov 2020 10:44 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியை நெருங்கியது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.93 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,976 கனஅடியிலிருந்து 7,126கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு. 66.05 டி.எம்.சியாக இருந்தது.
 

ADVERTISEMENT

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT