சேலம்

டிச.4-ல் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

30th Nov 2020 12:48 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோயில் மகா  கும்பாபிஷேகம் வருகிற 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. 
இதனை முன்னிட்டு திங்கட்கிழமை காலை ஸ்ரீ விநாயகர் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் புதிய பிம்பங்கள் கரிகோலம் முக்கிய தேரோடும் வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். 
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர்குழுத் தலைவரும் திருப்பணிக்குழு செயலதலைவருமான அ.மோகன் தலைமையில் நடைபெற்றது. திருப்பணிக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன் விஜயன் சீனிவாசன் சரவணன் பாண்டியன் மகாலிங்கம் ராஜகணபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
ஏராளமான பெண்கள் தீர்த்தங்களும் ஏந்தி வந்தனர்.
 

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT