சேலம்

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் லாரி உரிமையாளர்கள் மனு

DIN

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவினை அளித்தனர். 

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.செல்வராஜூ தலைமையில் பொருளாளர் என்.மோகன்குமார், இணைச்செயலர் எம்.சின்னதம்பி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் லாரித்தொழில் உள்ள பல்வேறு இடர்பாடுகளை களைய வலியுறுத்தி சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.சுப்ரமணியனித்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-கடந்த எட்டு மாதங்களாக தீ நுண்மி தொற்று பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சரக்கு வாகனங்களுக்குப் போதிய பாரம் கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை இன்னும் முழுமையாக தொடங்காத நிலையே உள்ளது. லாரி உரிமையாளர்கள் வருமானம் இல்லாத சூழ்நிலையில் காலாண்டுவரி, வாகனக் காப்பீடு ஆகியவற்றை நிலுவையின்றி செலுத்தி வருகிறோம். கர்நாடகம், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் காலாண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோடு ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகன இருப்பிடம் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற நடைமுறையும் இல்லை.

தமிழகத்தில் வரிவிலக்கு அளிக்காமல் நாள் தோறும் புதிது புதிதாக உத்தரவுகள் பிறக்கப்பிக்கப்பட்டு வருகின்றன. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் அங்கீகரிப்பட்ட அமைப்புகளான ஏஆர்ஏஐ, ஐசிஏடி போன்றை அமைப்புகளின் அனுமதி பெற்றுள்ள அனைத்து தயாரிப்பு நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளையும் பொருத்தலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓளிரும் பட்டைகளை லாரிகளில் ஒட்டுவதற்கு அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் விலை வாகனத்தின் நீளத்தைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படுகின்றது.

வெளிச்சந்தைகளில் தரமான ஓளிரும் பட்டைகள் அதிகபட்சமாக ரூ.1200 முதல் ரூ.1500 வரை கிடைக்கின்றது. இந்நிலையில் அரசு உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தகுதிச்சான்று பெறும் கனரகவாகனங்களுக்கு ஜிபிஎஸ் எனும் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் கருவிகளை ஏஆர்ஏஐ, ஐசிஏடி போன்ற அமைப்புகளால் 140 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் 8 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதால் ஒரு வாகனத்திற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் செலவு செய்து வந்த நிலையில் தற்போது போக்குவரத்து ஆணையர் குறிப்பிட்டுள்ள நிறுவனங்களில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. 

இந்நிலையில் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம், 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் பாரங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்குண்டான வாடைகை மட்டும் உயரவில்லை. இதனையடுத்து இரண்டு வாகனங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொழில் செய்து வரும் சிறு லாரி உரிமையாளர்கள் இத்தொழிலை விட்டே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலினை செய்து லாரித்தொழில் மேலும் நலிவடையாமல் காத்திட வேண்டுமென அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கையினை வலியுறுத்தி எடப்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சுப்ரமணி தலைமையில் செயலர் செம்பாகவுண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT