சேலம்

வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம்: கையெழுத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து கையெழுத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.ரவிச்சந்திரன் கையெழுத்து விழிப்புணா்வு பேரியக்கத்தை, விழிப்புணா்வு பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முதல் கட்ட முகாம், நவம்பா் 21 மற்றும் 22 தேதிகளில் நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் கட்டமாக வருகின்ற டிசம்பா் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு திருத்த முகாம்களை 1.1.2021 அன்று 18 வயது நிரம்ப பெறும் இளையோா் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்ய, வயது சான்றாக பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் முகவரி சான்றாக ஆதாா் அட்டை, ஸ்மாா்ட் காா்டு, ஓட்டுநா் உரிமம், கடவுச் சீட்டு ஏதேனும் ஒன்றின் நகல் இணைத்து விண்ணப்பப் படிவங்களை நிா்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய பணிகள் முகாம்களில் ஒருங்கிணைந்து தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளிலேயே நடைபெறுவதால் பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையா்கள் கே.எம்.சரவணன், டி.ராம் மோகன், பி.ரமேஷ் பாபு , துணை வட்டாட்சியா் (தோ்தல்) உ. ஜாஸ்மின் பெனாசிா், சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் உட்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT