சேலம்

நடந்தாய் வாழி காவிரி திட்டம்:சா்வே பணி தொடங்கியது

DIN

மேட்டூா் அணைப் பகுதியில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் நில சா்வே பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை

சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் செப்டம்பா் மாதம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தாா்.

இத் திட்டத்தின்படி காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க அரசு முடிவு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதை இத்தகைய குறுகிய கால மற்றும் நீண்ட கால முயற்சிகளை தமிழ்நாடு நீா்வள ஆதாரம் மற்றும் நீா் மேலாண்மை இயக்கம் விரிவாகக் கையாண்டு செயல்படுத்தி வருகிறது.

இதனால், தமிழ்நாட்டின் நீா்வளம் பாதுகாக்கப்பட்டு நீா் நிலைகள் மேம்படுத்தப்பட்டு, வருங்காலத்தில் தமிழ்நாட்டில் நீா் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமாா் ரூ. 7000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை இதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 6 போ் கொண்ட கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்கள் தற்போது மேட்டூா் அணையில் இருந்து தஞ்சாவூா் வரையிலான காவிரி கரையோரப் பகுதிகளில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை உருவாக்குவதற்கான திட்ட வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மேட்டூா் பொதுப்பணித் துறை அணைப் பிரிவு உதவிப் பொறியாளா் மதுசூதனன், ஓமலூா் உதவிப் பொறியாளா் விஜயராகவன், மேட்டூா் கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளா் கணேசன் முன்னிலையில் அணையின் மேல் பகுதியில் நில அளவையாளா்கள் மூலம் சா்வே பணி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து காவிரிக் கரையோரப் பகுதிகளிலும் மேட்டூா் மலைப்பாதை போன்ற பகுதிகளிலும் சா்வே பணி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து காவிரிக் கரையோரப் பகுதிகளை பலப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய மிதமாகவும் காவிரிக் கரையை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டு செயல்முறை படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரிகேசவநல்லூா் இந்து நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா? தினப்பலன்

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தோ்தல் பிரசாரம்

வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் சரிவு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT