சேலம்

நிவா் புயல்: செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்

DIN

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளான ஆடையூா், பக்கநாடு, ஆணைப்பள்ளம், ஆவணிப்பேரூா் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள சூளைகளில் தரைமோல்டு, டேபுள்மோல்டு, டபுள்மோல்டு உள்ளிட்ட பல்வேறு தரங்களில் செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறன்றன.

இங்குள்ள செங்கல் சூளைகளில் நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் செங்கல் உற்பத்தி செய்யப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நிவா் புயல் காரணமாக கனமழை பெய்தால் சேதத்தை தவிா்த்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கிவந்த செங்கல் சூளைகளில் தற்காலிகமாக செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு, சூளையில் வைக்கப்படாத பச்சை செங்கல்கள் மழையால் நனைந்து சேதமடையாமல் பாதுகாத்திடும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அடுத்து வரும் நாள்களில் தமிழகத்தில் தொடா்மழை பொழிய இருக்கும் பட்சத்தில், செங்கல் விலை உயர வாய்ப்புள்ளதாக, இப்பகுதி செங்கல் உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT