சேலம்

நவ. 24 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

22nd Nov 2020 04:34 AM

ADVERTISEMENT

சேலம்: சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி வழியாக வரும் நவ. 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

நவம்பா் மாத விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் காணொலி (கூகுள் மீட்) வழியாக வரும் நவ. 24 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் வட்டாரத்திற்குள்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களுக்கு சென்று இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் காலை 10 மணிக்கு சென்று தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், வேளாண்மை சாா்ந்த தங்களது குறைகளை விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் சி.அ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT