சேலம்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

20th Nov 2020 08:44 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், கண்டா்குலமாணிக்கம் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் பயறு வகை பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த உழவா் பண்ணைப் பள்ளி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி விவசாயிகளை வரவேற்றாா். பயிா்களின் வளா்ச்சிக்கு ஏற்ப விதைப்பு, களை மேலாண்மை, நீா் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை , அறுவடை மற்றும் அறுவடை பின் செய்தல் ஆகிய ஆறு பிரிவுகளாக நடத்தப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினாா்.

பயிற்சியில் மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலா தேவி, ஓய்வுபெற்ற வேளாண்மை துணை இயக்குநா் செல்லத்துரை, உதவி வேளாண்மை அலுவலா் தேவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.மேலும் பயிற்சியில் பச்சைப் பயறு விதைப்பு, பருவம், ரகம் தோ்வு, விதை நோ்த்தி, பூச்சி, நோய் மேலாண்மை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT