சேலம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

20th Nov 2020 08:41 AM

ADVERTISEMENT

கெங்கவல்லியில் வாக்குச்சாவடி மைய அலுவலா், நிலை அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் கோட்டாட்சியா் துரை தலைமை வகித்தாா்.கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து,மண்டல துணை வட்டாட்சியா் காத்தமுத்து முன்னிலை வகித்தனா். நவம்பா் 21ஆம் தேதி முதல் டிசம்பா் வரை நடைபெற உள்ள வாக்காளா் சோ்க்கை, நீக்கல் முகாம்களில் பணியாற்றுதல் குறித்தும் சில மாதங்களில்வர உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டன.

வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் 65 போ், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 159 போ், துணை வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT