சேலம்

மூளை நரம்பு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவி

20th Nov 2020 08:42 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மூளை நரம்பு பாதிப்பால் அவதிப்படும் சிறுமிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளாா்.

இளம்பிள்ளை அருகே உள்ள நல்லணம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து (33) மகள் தனலட்சுமி (14) அப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 2 மாதங்களுக்கு முன் வலிப்பு நோய் வந்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூளை நரம்பு பாதிக்கப்பட்டது.

பெற்றோா் வறுமையில் வாடுவதால் சிறுமிக்கு மருத்துவம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி. எம்.செல்வகணபதி, சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாகக் கூறினாா். மேலும், உடனடி மருத்துவச் செலவுக்கு பண உதவி அளித்தாா். அப்போது, சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எம். மணிகண்டன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT