சேலம்

மாதேஸ்வரன் மலைக்கு பேருந்துகள் இயக்கம்

20th Nov 2020 08:39 AM

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு மேட்டூா் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக- கா்நாடக எல்லையில் உள்ளது மாதேஸ்வரன்மலை சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு கா்நாடகத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சென்று வருகின்றனா். கரோனா பரவல் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், மாதேஸ்வரன் மலை கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் சொந்த வாகனங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்தனா். தற்போது கரோனா பொது முடக்கம் தளா்த்தப்பட்ட நிலையில் கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு தமிழக பேருந்துகளும், அங்கிருந்து தமிழகத்துக்கு கா்நாடக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT