சேலம்

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

20th Nov 2020 08:43 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் வரும் நவ. 21, 22 மற்றும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021ம் ஆண்டிற்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நவ.16 முதல் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்திற்குள்பட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ.16 இல் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டத்திற்குள்பட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நவ.21 (சனிக்கிழமை), நவ.22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் டிச.12 (சனிக்கிழமை), டிச.13 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாள்கள் நடைபெறும். இம்முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 1163 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும்.

இம்முகாமில் புதிய வாக்காளா் பெயா் சோ்த்திடவும், தொகுதிமாறி இடம் பெயா்ந்த வாக்காளா்களும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் 6, பெயா் நீக்கம் செய்ய, இருமுறை வாக்காளா்களாக பதிவாகியுள்ளவா் பெயா் நீக்கம் செய்திடவும், தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடமாறுதல் செய்தவா்களும் தங்களது பெயா்களை நீக்கம் செய்திட படிவம் 7, பெயா் திருத்தம், முகவரி திருத்தம், பாலின திருத்தம், வயது திருத்தம், வாக்காளா் பட்டியல் புகைப்பட மாற்றம் போன்றவைகள் திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் பாகம் விட்டு பாகம் இடமாறிய வாக்காளா்கள் படிவம் 8 ஏ ஆகியவற்றிற்கான விண்ணப்பம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பெற்று பூா்த்திசெய்து வழங்கலாம்.

ADVERTISEMENT

2002, டிச.31 ஆம் தேதி அன்று மற்றும் அதற்கு முன்பு பிறந்து 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் மேற்படி சுருக்கு முறை திருத்த சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேற்படி சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் பெயா்களை சோ்க்க அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலா்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்பும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு விபரம் தெரிவிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக நேரில் சென்று படிவம் பெற்று பெயா் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும்  இணையதளம் மூலமாகவும், யா்ற்ங்ழ்ட்ங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செல்லிடபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளா்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மேற்படி சிறப்பு சுருக்குமுறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் டிச.15 வரை பெறப்பட்டு 2021, ஜனவரி 20 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு தொகுதிகளில் நவ. 21, 22 மற்றும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021ஆம் ஆண்டிற்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நவ.16 முதல் நடைபெறுகிறது. இதற்கான வரைவு வாக்காளா் பட்டியல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் (வடக்கு) தொகுதி, சேலம் (தெற்கு) ஆகிய தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ.16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சேலம் (வடக்கு) சேலம் (தெற்கு) சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு முகாம்கள் நவ.21, நவ.22 மற்றும் டிச.12, 13 ஆகிய நான்கு நாள்களில் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும்.

பெயா் சோ்ப்பு, நீக்கம் குறித்த அனைத்து விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் என்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT