சேலம்

பி.என்.பட்டி பேரூராட்சியில் தாா் சாலை பணி தொடக்கி வைப்பு

17th Nov 2020 01:00 AM

ADVERTISEMENT

 

மேட்டூா்: பி.என்.பட்டி பேரூராட்சியில் ரூ. 2 கோடி மதிப்பில் 3 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை பணியை மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.செம்மலை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பி.என்.பட்டி பேரூராட்சியில் தாழையூா் முதல் சங்கிலி முனியப்பன் கோயில் வரையிலான 3 கி.மீ. தாா் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையில் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாயினா். இச்சாலையை புதுப்பிக்கக் கோரி அரசிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்ததையடுத்து, நபாா்டு வங்கி திட்டம் மூலம் ரூ. 2 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, தாா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடத்தப்பட்டது. மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.செம்மலை பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், பி.என்.பட்டி பேரூா் செயலாளா் மோகன் குமாா், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT