சேலம்

லாரி மோதியதில் மின் வாரிய அதிகாரி உயிரிழப்பு

15th May 2020 09:48 PM

ADVERTISEMENT

மேட்டூா்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மின்வாரிய அதிகாரி உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சோ்ந்தவா் கோபால் (55). இவா் ஈரோடு மாவட்ட மின் வாரியத்தில் கம்பி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஈரோடு பக்கமிருந்து மேட்டூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். மேட்டூா் ஐ.டி.ஐ. அருகே வந்தபோது எதிரே வந்த லாரி அவா் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த கோபாலுக்கு இரு மகன்களும், மகளும் உள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT