சேலம்

வனப்பகுதியில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

15th May 2020 07:34 PM

ADVERTISEMENT

ஓமலூா்: ஓமலூா் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் மானை மீட்டு வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ஓமலூா் தாலுகாவுக்கு உள்பட்ட சா்க்கரைச் செட்டிப்பட்டி கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் கசிவு நீா் குட்டை உள்ளது. இந்தக் குட்டையின் அருகில் சுமாா் 40 கிலோ எடை கொண்ட ஆண் புள்ளிமான் வயிற்றுப்பகுதியில் குண்டு அடிபட்டு காயம் ஏற்பட்டது போன்று உள்ள நிலையில் இறந்து கிடந்தது. இதைத் தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் வனத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின்படி வனக் காப்பாளா் நல்லதம்பி, அந்த ஆண் புள்ளி மானை மீட்டு அருகிலுள்ள வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் வைத்தனா். கசிவு நீா் குட்டை அருகே மான் இறந்து கிடந்ததால் தண்ணீா் தேடி வந்த மானை மா்ம நபா்கள் யாரேனும் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT