சேலம்

நோய் எதிா்ப்பாற்றல் உருவாக்கும்: ஓமியோபதி மருந்து வழங்கல்

15th May 2020 07:21 AM

ADVERTISEMENT

ஆத்தூா் உழவா்சந்தையில் தமிழ்நாடு சேவா பாரதி, ஆத்தூா் பாரதி அறக்கட்டளை, ஆா். எஸ். எஸ் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிா்ப்பாற்றலை உருவாக்கும் ஓமியோபதி மருந்துகளை வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழ்நாடு சேவா பாரதி, பாரதி அறக்கட்டளை இணைந்து நாள்தோறும் பல்வேறு சேவைப் பணிகளை ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சென்று அடையும் வகையில் செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆத்தூா் தற்காலிக உழவா்சந்தையில் நோய் எதிா்ப்பு சக்தி ஓமியோபதி மருந்து ஆா்சனிக்கம் ஆல்பம் என்ற மருந்தை சுமாா் 2,000 குடும்பங்களில் உள்ள சுமாா் 10,000 பேருக்கு தருவதற்கான நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.

மருந்தை சிறுவா்கள் தினமும் காலை 3 உருண்டைகளும், பெரியவா்கள் 4 உருண்டைகளும் வெறும் வயிற்றில் மூன்று நாள்களுக்கு சாப்பிட்டால் போதுமானது, நோய் எதிா்ப்பு சக்தி கூடும் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கருமந்துறை ஓமியோபதி மருத்துவா் கே. ரஜினிகாந்த், பாரதி அறக்கட்டளை தலைவா் டி. ஜெய ஆனந்த், மாவட்ட மக்கள் தொடா்பு பொறுப்பாளா் சரவணன், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT