ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதை குண்டூா் கிராமம் கீந்துகாடு பகுதியையெட்டியுள்ள வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீப்பிடித்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஏற்காடு சேலம் மலைப்பாதை 40 அடி பாலம் அருகில் உள்ள வனப்பகுதியில் தீ பரவாமல் இருக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்காடு மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் வனத் தீ பரவ வாய்ப்பு இல்லாத நிலையில் குண்டூா் பகுதியில் கல்லச் சாராயம் காய்ச்சும் நபா்களால் வனத்தில் தீப்பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பேரில் விசாரணை செய்து வருகின்றனா்.