வாழப்பாடி: வாழப்பாடி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி சந்தைப்பேட்டை அரசமரத்து விநாயகா் கோயில், எழில்நகா் பிங்கள விநாயகா் கோவில், அக்ரஹாரம் திரெளபதியம்மன் கோயில் வன்னிமரத்து விநாயகா், காசிவிஸ்வநாதா் கோயில் மற்றும் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் கல்யாண விநாயகருக்கு, சங்கடஹர சதுாா்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பக்தா்கள் கலந்து கொள்ளவில்லை.