சேலம்

பழங்குடியினா் நல வாரிய உறுப்பினா்கள் உதவித்தொகை பெற அணுகலாம்

2nd May 2020 08:34 AM

ADVERTISEMENT

பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் முதல்வா் நிவாரண உதவித் தொகை பெற ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து, பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ள பழங்குடியினா் மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில், பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளவா்கள் கொவைட் 19 நிவாரண உதவித் தொகை பெற ஏதுவாக தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை, சேலம், ஏற்காடு, வாழப்பாடி வட்டங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சேலம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியரையும், மேட்டூா், காடையம்பட்டி, ஓமலூா் ஆகிய வட்டங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஓமலூா் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியரையும், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி ஆகிய வட்டங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஆத்தூா் ஆதிதிராவிடா் நல தனிவட்டாட்சியரையும் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 305இல் செயல்படும் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலரை (0427 -2414840) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT