சேலம்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

2nd May 2020 07:41 PM

ADVERTISEMENT

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத மளிகை கடை மற்றும் மீன் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, 3 கடைகளுக்கு சீல் வைத்தனா்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து ஈடுபடக் கூடாது எனவும், அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்தனா்.

அதேபோல கொண்டலாம்பட்டியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட மீன் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT