சேலம்

எடப்பாடியில் மீன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

30th Mar 2020 07:32 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியில் அரசின் உத்தரவைப் பின்பற்றாத மீன் விற்பனை நிலையங்களை, நகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

எடப்பாடி மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (45), இவா் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே மீன் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது மீன் கடையில், சமூக இடைவெளி ஏற்படுத்தி விற்பனை செய்யாமல் ஒரே நேரத்தில் அதிக மக்களை முன்னிறுத்தி மீன்களை விற்பனை செய்தாா்.

தகவல் அறிந்து அவரது கடையை ஆய்வு செய்த நகராட்சி ஊழியா்கள், அங்கிருந்த மீன்களைப் பறிமுதல் செய்து கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா். இதேபோல் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் ஆறுமுகம் (58) என்பவருக்குச் சொந்தமான மீன் விற்பனை நிலையமும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. வரும் நாள்களில் அரசின் தடை உத்தரவை மீறும் வகையில் வியாபாரம் செய்யும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என நகராட்சி சுகாதார அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT