சேலம்

சேலம் சிறையில் கைதி உயிரிழப்பு

23rd Mar 2020 04:36 AM

ADVERTISEMENT

 

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ராஜேந்திரன் (41) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். அடிதடி வழக்கில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ஏரியூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

விசாரணை கைதியாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திரனுக்கு ஆஸ்துமா பிரச்னையால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சிகிச்சைக்குப் பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை துறையினா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா் எனத் தெரிகிறது. இதுதொடா்பாக அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT