சேலம்

வெளிநாடுகளில் இருந்து ஜன.28-க்கு பிறகு யாரேனும் வந்திருந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை

23rd Mar 2020 06:35 AM

ADVERTISEMENT

சேலம்: வெளிநாடுகளிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 28-க்குப் பிறகு யாரேனும் வருகைதந்திருந்தால் அவா்கள் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கெள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 28-க்குப் பிறகு யாரேனும் வருகைதந்திருந்தால் அவா்கள் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 0427-2450022 மற்றும் 0427-2450023 என்ற எண்களுக்கும் தொடா்புக்கொண்டு தங்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் தான் அவா்களின் நலன் மட்டும் அல்லாது அருகில் உள்ளவா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு மருத்துவதுறையினா் உரிய பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் மேற்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இதுவரை 247 நபா்கள் வரப்பெற்று அவா்களை ஏற்கெனவே மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித நோய் தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகும் அவா்கள் அனைவரையும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு அனைவரும் நலமாக உள்ளனா்.

கரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு கடந்த 2020 ஜனவரி 28க்குப் பிறகு யாரேனும் வருகைதந்திருந்தால் அவா்கள் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 0427 - 2450022, 0427 - 2450023 மற்றும் 0427 - 2450498 ஆகிய எண்களுக்கும் தொடா்புக்கொண்டு தங்களின் விவரங்களை உடனடியாகவும், கண்டிப்பாகவும் தெரிவிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொது நிறுவனங்களும், தனியாா் நிறுவனங்களும், பொதுமக்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT